மகளிர் தினம் கொண்டாடுவதோ அல்லது எங்களுக்கு சரி உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு முன்போ , பெண்களே உங்களுக்கு இரண்டு கேள்வி.
- உங்கள் மகனை சமையல் வேலைகளுக்கு அழைப்பது உண்டா ? ( உங்கள் மகளும் அப்பொழுது வேலை இல்லாமல் விளையாடி கொடிருக்கிறாள் என்று வைத்து கொள்ளுங்கள் )
- உங்கள் மகன் சமைத்து கொண்டிருக்கும் பொது உங்கள் மருமகள் டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அதை உங்களால் சகித்து கொள்ள முடியுமா? ( உங்கள் மருமகளும் வேலைக்கு போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்)
உரிமையை கொடு என்று ஆண்களிடம் கேட்பதை விட்டுவிட்டு , உங்கள் மகனுக்கு சின்ன வயதிலிருந்து சமைப்பது, துவப்பைது எல்லாம் பெண்களின் வேலை மட்டும் அல்ல என்பதை புரிய வையுங்கள் .
வேலைக்கு போவதை ஆண்கள் ஏற்று கொள்கின்றனர். அனால் பெண்களின் வேலையை செய்ய மாட்டோம் என்பது மட்டும் சரியா ?
இந்த உண்மையை அணைத்து பெண்களும் புரிந்தும் கொள்ளும் போது அணைத்து நாட்களுமே மகளிர் தினம் தான். அதை தனியாக கொண்டாட தேவை இல்லை.!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக