வியாழன், 10 மார்ச், 2016

மனது !!

இந்த மனது ,

ஒரு நாள் நினைக்குது ,
அம்பானி ஆகணும்னு.

அடுத்த நாளே நினைக்குது ,
ஆண்டியா இருந்தா கூட பரவாயில்ல. நிம்மதியா இருந்தா போதும்னு !!


ஒரு நாள் நினைக்குது
'இனிமேல் டயட்ல இருக்கணும்னு ,நோயில்லாம வாழணும்னு '

அடுத்த நாள் நினைக்குது
'சாப்பிடாமா  வாழ்ந்து என்ன சாதிக்க போறோம்னு, நல்ல சாப்பிட்டு வாழ்ந்துட்டு போயிடலாம்னு !!'


ஒரு நாளைக்கு இந்த பாடல் பிடிக்குது ,
'நமசிவாயா நமசிவாயா ஒம் நமசிவாயா '

அடுத்த நாள் பிடிக்குது ,
'டங்கமாரி ஊதாரி ஊத்திகினு நீ நாறி '.!!


என் மனதை என்னாலையே  புரிந்து கொள்ள முடியவில்லை . :(
சும்மாவா சொன்னங்க ?? 'தன்னை அறிந்தவன் ஞானினு'  !!!




மகளிர் தினம் !!!

மகளிர் தினம் கொண்டாடுவதோ அல்லது எங்களுக்கு சரி உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு முன்போ , பெண்களே உங்களுக்கு இரண்டு கேள்வி.
  1. உங்கள் மகனை சமையல் வேலைகளுக்கு அழைப்பது உண்டா ? ( உங்கள் மகளும் அப்பொழுது வேலை இல்லாமல் விளையாடி கொடிருக்கிறாள் என்று வைத்து கொள்ளுங்கள் )
  2. உங்கள் மகன் சமைத்து கொண்டிருக்கும் பொது உங்கள் மருமகள் டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அதை உங்களால் சகித்து கொள்ள முடியுமா? ( உங்கள் மருமகளும் வேலைக்கு போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்)
பெரும்பாலான பெண்களின் உண்மை பதில் 'இல்லை' என்பதுவாகத்தான் இருக்கும்.  ஆகையினால் மாற்றம் என்பது பெண்களிடம் தான் வர வேண்டும்.
உரிமையை கொடு என்று ஆண்களிடம் கேட்பதை விட்டுவிட்டு , உங்கள் மகனுக்கு சின்ன வயதிலிருந்து சமைப்பது, துவப்பைது எல்லாம் பெண்களின் வேலை மட்டும் அல்ல என்பதை புரிய வையுங்கள் .

வேலைக்கு போவதை ஆண்கள் ஏற்று கொள்கின்றனர். அனால் பெண்களின் வேலையை செய்ய மாட்டோம் என்பது மட்டும் சரியா ?

இந்த உண்மையை அணைத்து பெண்களும் புரிந்தும் கொள்ளும் போது அணைத்து நாட்களுமே மகளிர் தினம் தான். அதை தனியாக கொண்டாட தேவை இல்லை.!!

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்களே !!!

கொலை , கொள்ளை, கற்பழிப்பு , அசிட் வீச்சு , குண்டு வெடிப்பு இப்படி எல்லா தப்பையும் பண்ற ஆம்பளைகளை விட்டுடுடறீங்க.

பெண்கள் காதல்ல எமாத்துறாங்கனு (???) , இப்படிலாம் பாட்டு எழுதறீங்களே..

அடிடா அவல... ஒதடா அவல...
விட்ரா அவல... தேவையே இல்ல..

ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி,
பொம்பளையெல்லாம் தீவரவாதி,
அமைதியா காதல் வேணாம்னு ஒதுங்கற பெண்களை கிண்டல் பண்றத விட்டுட்டு ஆசிட் ஊதறவங்களை கொஞ்சம்  கண்டுக்கங்க !!!!
          ரேப்பையும் பண்ணிட்டு சூப்பு சாங்கும் பாடுறது ஆண்கள் தான்!!!



என் கவிதைகள்


இன்றய விவசாயம்

விளை நிலங்களை
விலை நிலங்களாக்குகிறது.

களை எடுத்தவனை
களை ஆக்குகிறது.

பூச்சிக் கொல்லிகளை
மனித கொல்லிகள் ஆக்குகிறது.

சாப்பாடு போட்டவனை
சாப்ட்வேருக்கு தள்ளுகிறது


விடுதி 
படிப்பது ஒரு குற்றமா ?
ஏன் அடைத்து விடுகின்றனர் , விடுதி என்ற சிறையில் ?

புகை 
பேருந்தில் உள்ளது புகை பிடிக்காதிர் பலகை .
ஆனால் , பேருந்தே நீ புகை பிடிக்கிறாயோ ?
உந்தன் பின்னால் அத்தனை புகை வருகிறதே?

வானம் 
வானமே ,
நீ வானவில் கொண்டையிட்டு ,
சூரிய பொட்டு  வைத்து ,
 நீல வண்ண பட்டுடுத்தி உள்ளாயே !!
அப்படி என்றால் நீயும் ஒரு பெண்ணா ?

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

படித்ததில் கேட்டதில் பிடித்தது !!

நல்லா வருவே  என்பதற்கும்
நல்லவனா வருவே  என்பதற்கும்
நிறைய வித்தியாசங்கள் உள்ளன.!!


ஆடின ஆட்டம் பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பொணத்துக்கு முன்னால் நாளைய
பொணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது!!


பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்ககாக ஒரு ஆட்டம்
எட்டுக் காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே!!

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா
அது பிரித்தாளும் பாலோடு தண்ணீர கலப்பது மனிதனின் மூளையப்பா


எல்லோரும் வாழ்க்கையை ஈசியா எடுத்துக்கிறாங்க, ஆனா மரணத்த வெறுக்கிறாங்க, ஏன்னு வாழ்க்கை மரணத்துகிட்ட கேட்டுச்சாம். அதுக்கு வாழ்க்கை சொல்லிச்சாம்,
"நான் ஆழகான பொய், ஆனா நீ கசப்பான உண்மை"

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பணம் பத்தும் செய்யும் ஆனால் அதை சாப்பிட முடியுமா?

இன்னும் ஒரு 15 - 20வருடங்கள் கழித்து இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இப்பொழுதே தண்ணீர் இல்லை.மின்சாரம் பத்தவில்லை.இதனால் உணவு உற்பத்தி குறைந்து விட்டது.நமது வருங்கால தலைமுறை எப்படி வாழப் போகிறது இந்த உலகத்தில். இதை பற்றி சிந்திக்க பணத்தை தேடி அலையும் இந்த தலைமுறையினருக்கு நேரம் இருகிறதா?
நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வெள்ளையர்களிடம் பெற்ற சுதந்திரத்தை திரும்ப அடமானத்தில் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் .எல்லா துறைகளிலும் அந்நியர்களை உள்ளே நுழைத்து உள்நாட்டு வணிகர்கள் மற்றும் விவசாயிகளை படும் பாதாளத்தில் தள்ளி கொண்டு இருகிறார்கள்.அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து வாங்கி கொண்டு இருந்தால் நமக்கு வேலை வாய்ப்புகளும் குறையும் விலைவாசிகளும் அவர்கள் வைத்த சட்டம் ஆகிவிடும். இவை எல்லாம் சாதரணமான மக்கள் நமக்கே புரியும் போது, மெத்த படித்த நமது அரசியல் ஞானிகளுக்கு தெரியாமல் என்ன? எல்லாத்திலும் ஊழல் செய்து தங்களுடைய வீடுகளை வளப்படுத்தி கொள்ளத் தான் அவர்களுக்கு அரசாங்கம் நமது வரிப்பணத்தை செலவு பண்ணி தேர்தல் நடத்தி பணியில் அமர்துகிறதா? இவர்களை சிறையில் போட்டால் அங்கேயும் ஊழல், செல்வாக்கை வைத்து வெளியில் வந்து விடுகிறார்கள்.பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லாத்திலும் ஊழலை செய்து பணத்தை பெருக்கி கொண்டு இருகிங்களே..நாளை உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அந்த பணத்தை தின்றா உயிர் வாழ முடியும்? எல்லாத் துறைகளிலும் மாநிலத்தை பின்தங்க வைக்கும் நீங்கள் மக்களை 'குடி மக்களாக்கும்' டாஸ்மாக்கில் மட்டும் முதலிடத்தில் இருகிறிர்கள். அந்த போதை பத்தாது என்று இலவசங்கள் என்ற பெயரில் இன்னொரு போதையை அறிமுக படுத்தி அவர்களை சோம்பேறியாக்கி கொண்டு இருக்கிறிர்கள்.

அது மட்டுமா? மனித வாழ்விற்கு முக்கியமான தேவை உணவு.அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான மின்சாரத்தை கொடுக்காமல், சும்மா கூத்தடிக்கும் ஹோடேல்களுக்கும், இரவு கிளப்பிற்கும் தானே மின்சார விநியோகம் நடக்கிறது..எந்த அளவிற்கு மின்சாரம் இருக்கிது என்று தெரிந்து கொண்டு புதிய தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவங்களைஅனுமதிக்காமல், பணக்கார முதலைகளின் கைக் கூலிகளாக வேலை பார்க்கும் இந்த அரசியல் வாதிகள் திருந்தும் நாட்கள் எப்பொழுது? அன்று எல்லாமே கையை விட்டு போய் விடும் அல்லவா?

இவர்கள் ஒருபுறம் நாட்டை சுரண்ட மற்றொரு புறம் ரியல் எஸ்டேட் முதலாளிகள்,இருக்கும் அணைத்து விவசாய நிலங்களையும் கூறு போட்டு வித்து கொண்டு இருக்கிறார்கள். மற்றும் குளங்களின் மணலை சுரண்டி தண்ணீரையும் சேமிக்க வழி இல்லாமல் செய்து விட்டார்கள். ஆக மொத்தம் விவசாயம் என்பது எதோ தேவை இல்லாத ஒன்று போல ஒரு ஓரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. நாம் சாப்பிட நமது முன்னோர்கள் பண்படுத்திய நிலத்தை நாம் நமது வாரிசுகளுக்கு பதிரப்படுதியாவது வைக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?


இதை எல்லாம் என்னால் எழுத தான் முடியும். சிலர் இதை படிப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் என் ஆசை எல்லாம் சம்பந்த பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதே..ஏற்கனவே நாம் பாதி பூமியை அழித்து விட்டோம். மிச்சத்தையாவது தயவு செய்துவருங்காலத்திற்கு விட்டு வையுங்கள் அல்லது நீங்கள் வாரிசுகளே பெற்று கொள்ளாதிர்கள். இல்லையெனில் நீங்கள் அவர்களுக்கு பெரிய பாவத்தை செய்கிறிர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.