செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பணம் பத்தும் செய்யும் ஆனால் அதை சாப்பிட முடியுமா?

இன்னும் ஒரு 15 - 20வருடங்கள் கழித்து இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இப்பொழுதே தண்ணீர் இல்லை.மின்சாரம் பத்தவில்லை.இதனால் உணவு உற்பத்தி குறைந்து விட்டது.நமது வருங்கால தலைமுறை எப்படி வாழப் போகிறது இந்த உலகத்தில். இதை பற்றி சிந்திக்க பணத்தை தேடி அலையும் இந்த தலைமுறையினருக்கு நேரம் இருகிறதா?
நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வெள்ளையர்களிடம் பெற்ற சுதந்திரத்தை திரும்ப அடமானத்தில் வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் .எல்லா துறைகளிலும் அந்நியர்களை உள்ளே நுழைத்து உள்நாட்டு வணிகர்கள் மற்றும் விவசாயிகளை படும் பாதாளத்தில் தள்ளி கொண்டு இருகிறார்கள்.அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து வாங்கி கொண்டு இருந்தால் நமக்கு வேலை வாய்ப்புகளும் குறையும் விலைவாசிகளும் அவர்கள் வைத்த சட்டம் ஆகிவிடும். இவை எல்லாம் சாதரணமான மக்கள் நமக்கே புரியும் போது, மெத்த படித்த நமது அரசியல் ஞானிகளுக்கு தெரியாமல் என்ன? எல்லாத்திலும் ஊழல் செய்து தங்களுடைய வீடுகளை வளப்படுத்தி கொள்ளத் தான் அவர்களுக்கு அரசாங்கம் நமது வரிப்பணத்தை செலவு பண்ணி தேர்தல் நடத்தி பணியில் அமர்துகிறதா? இவர்களை சிறையில் போட்டால் அங்கேயும் ஊழல், செல்வாக்கை வைத்து வெளியில் வந்து விடுகிறார்கள்.பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லாத்திலும் ஊழலை செய்து பணத்தை பெருக்கி கொண்டு இருகிங்களே..நாளை உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அந்த பணத்தை தின்றா உயிர் வாழ முடியும்? எல்லாத் துறைகளிலும் மாநிலத்தை பின்தங்க வைக்கும் நீங்கள் மக்களை 'குடி மக்களாக்கும்' டாஸ்மாக்கில் மட்டும் முதலிடத்தில் இருகிறிர்கள். அந்த போதை பத்தாது என்று இலவசங்கள் என்ற பெயரில் இன்னொரு போதையை அறிமுக படுத்தி அவர்களை சோம்பேறியாக்கி கொண்டு இருக்கிறிர்கள்.

அது மட்டுமா? மனித வாழ்விற்கு முக்கியமான தேவை உணவு.அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான மின்சாரத்தை கொடுக்காமல், சும்மா கூத்தடிக்கும் ஹோடேல்களுக்கும், இரவு கிளப்பிற்கும் தானே மின்சார விநியோகம் நடக்கிறது..எந்த அளவிற்கு மின்சாரம் இருக்கிது என்று தெரிந்து கொண்டு புதிய தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவங்களைஅனுமதிக்காமல், பணக்கார முதலைகளின் கைக் கூலிகளாக வேலை பார்க்கும் இந்த அரசியல் வாதிகள் திருந்தும் நாட்கள் எப்பொழுது? அன்று எல்லாமே கையை விட்டு போய் விடும் அல்லவா?

இவர்கள் ஒருபுறம் நாட்டை சுரண்ட மற்றொரு புறம் ரியல் எஸ்டேட் முதலாளிகள்,இருக்கும் அணைத்து விவசாய நிலங்களையும் கூறு போட்டு வித்து கொண்டு இருக்கிறார்கள். மற்றும் குளங்களின் மணலை சுரண்டி தண்ணீரையும் சேமிக்க வழி இல்லாமல் செய்து விட்டார்கள். ஆக மொத்தம் விவசாயம் என்பது எதோ தேவை இல்லாத ஒன்று போல ஒரு ஓரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது. நாம் சாப்பிட நமது முன்னோர்கள் பண்படுத்திய நிலத்தை நாம் நமது வாரிசுகளுக்கு பதிரப்படுதியாவது வைக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?


இதை எல்லாம் என்னால் எழுத தான் முடியும். சிலர் இதை படிப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் என் ஆசை எல்லாம் சம்பந்த பட்டவர்கள் திருந்த வேண்டும் என்பதே..ஏற்கனவே நாம் பாதி பூமியை அழித்து விட்டோம். மிச்சத்தையாவது தயவு செய்துவருங்காலத்திற்கு விட்டு வையுங்கள் அல்லது நீங்கள் வாரிசுகளே பெற்று கொள்ளாதிர்கள். இல்லையெனில் நீங்கள் அவர்களுக்கு பெரிய பாவத்தை செய்கிறிர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக